நியூயார்க்கில் இனவெறியை கண்டித்து ஆசியர்கள் பிரம்மாண்ட பேரணி..!

0 1075
நியூயார்க்கில் இனவெறியை கண்டித்து ஆசியர்கள் பிரம்மாண்ட பேரணி..!

சிய இனத்தவருக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் மற்றும் இன பாகுபாடுகளை கண்டித்து நியூயார்க் நகரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது.

அதில் 500 க்கும் மேற்பட்ட ஆசிய அமைப்புகளில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் பங்கேற்றனர். அமெரிக்காவில் காலங்காலமாக ஆசியர்களுக்கு எதிரான பாகுபாடு காட்டப்பட்டாலும், அண்மை காலமாக அது உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக பேரணியில் பங்கேற்றவர்கள் குற்றம் சாட்டினர்.

ஆசியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை கைவிட வேண்டும், இனவேறி வேண்டாம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பேரணியில் பங்கேற்றவர்களில் சிலர் ஏந்தி வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments