கொளத்தூர், திருவண்ணாமலை, சேப்பாக்கம் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய அதிமுக வலியுறுத்தல்..!

0 6776
கொளத்தூர், திருவண்ணாமலை, சேப்பாக்கம் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய அதிமுக வலியுறுத்தல்..!

கொளத்தூர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, காட்பாடி, திருச்சி மேற்கு, திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளில், தேர்தலை நிறுத்த வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து, அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதில், கொளத்தூர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, காட்பாடி, திருச்சி மேற்கு, திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளில், பணப்பட்டுவாடா குற்றச்சாட்டை எழுப்பியுள்ள அதிமுக, அந்த 5 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments