கிருஷ்ணகிரியில் அதிமுக பிரமுகர் வீட்டில் மொத்தம் ரூ.3,56,500 பறிமுதல்?

0 1346
கிருஷ்ணகிரியில் அதிமுக பிரமுகர் வீட்டில் மொத்தம் ரூ.3,56,500 பறிமுதல்?

கிருஷ்ணகிரியில் அதிமுக பிரமுகர் என்று கூறப்படுவர் வீட்டிலிருந்து மொத்தம் 3 லட்சத்து 56 ஆயிரத்து 500 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னப்பநாயக்கனூரில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ராமு என்பவரது வீட்டில் நேற்றிரவு தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

இதில் கணக்கில் வராத 2 லட்சத்து 33 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் வாக்காளர் பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை மீண்டும் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், ராமு வீட்டிலிருந்து மேலும் 1 லட்சத்து 23 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments