தனுஷ் கோடி கடற்கரையில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் பாட்டிலில், 7 துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுப்பு

0 1554
தனுஷ் கோடி கடற்கரையில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் பாட்டிலில், 7 துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுப்பு

ராமேஸ்வரம், தனுஷ் கோடி கடற்கரையில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் பாட்டிலில், பயன்படுத்தாத 7 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தனுஷ்கோடி பழைய தேவாலயம் கடற்கரையோரம் மீனவர் ஒருவர் கரை ஒதுங்கிய கழிவுகளை சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது, கரையோரம் மிதந்த பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்து திறந்து பார்த்த போது அதில் , 7 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்ததை கண்ட அவர், ராமேஸ்வரம் கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த மத்திய உளவுத்துறை அதிகாரிகள், பயன்படுத்தாத 5.6 எம்.எம் கொண்ட நான்கு தோட்டாக்களும், 9 எம்.எம் கொண்ட 3 தோட்டாக்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments