கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களுக்கு மத்தியக் குழுக்களை அனுப்ப முடிவு: மத்திய அரசு நடவடிக்கை

0 890
கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களுக்கு மத்தியக் குழுக்களை அனுப்ப முடிவு: மத்திய அரசு நடவடிக்கை

கொரோனா பரவல் அதிகமுள்ள மகாராஷ்டிரம், பஞ்சாப், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு மத்தியக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

பல மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் டெல்லியில் நேற்றுப் பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சரவைச் செயலர், பிரதமரின் முதன்மைச் செயலர், நலவாழ்வுத்துறைச் செயலர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதன் முடிவில் மகாராஷ்டிரம், பஞ்சாப், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய மத்தியக் குழுவினரை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்தக் குழுவினர் மாநில நலவாழ்வுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்துக் கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்க உள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments