புதுச்சேரி ஏனாமில் மாயமான சுயேச்சை வேட்பாளர் ஆற்றங்கரையில் மயங்கிய நிலையில் மீட்பு: கடத்தப்பட்டாரா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை

0 1617
புதுச்சேரி ஏனாமில் மாயமான சுயேச்சை வேட்பாளர் ஆற்றங்கரையில் மயங்கிய நிலையில் மீட்பு: கடத்தப்பட்டாரா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை

புதுச்சேரி ஏனாமில் மாயமான சுயேச்சை வேட்பாளர் கோதாவரி ஆற்றங்கரையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் கிழக்குக் கோதாவரி மாவட்டத்தின் நடுவே உள்ள ஏனாம் புதுச்சேரி ஆளுகைக்குட்பட்டதாகும். இந்தச் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளரான துர்க்கா பிரசாத் பெம்மாடியை ஏப்ரல் முதல் நாளில் இருந்து காணவில்லை எனக் கூறி அவர் மனைவி சாந்தி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினர் அவரைத் தேடி வந்த நிலையில் இன்று கோதாவரி ஆற்றங்கரையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அரசு மருத்துவமனையில் அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் கடத்தப்பட்டாரா? அவரை யாரேனும் அடித்துத் துன்புறுத்தி ஆற்றங்கரையில் போட்டுவிட்டுச் சென்றனரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments