ஊரடங்கு எதிரொலி: மும்பை தாதர் சந்தையில் காய்கறிகளை வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்

0 3008

மகாராஷ்டிரத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 57 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மும்பை தாதர் சந்தையில் காய்கறிகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

மகாராஷ்டிரத்தில் தற்போதைய நோயாளிகள் எண்ணிக்கை 4 லட்சத்து 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஒரேநாளில் புனேயில் 12 ஆயிரத்து 494 பேரும், மும்பையில் 11 ஆயிரத்து 163 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் முழு ஊரடங்கு விதிக்கப்படலாம் என்கிற அச்சத்தில் மும்பை தாதர் சந்தையில் கூட்டமாகத் திரண்ட மக்கள் ஒருவாரத்துக்குத் தேவையான காய்கறிகள், பழங்களை வாங்கிச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments