சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி ஒருவர் உடல் சிதறி உயிரிழப்பு; 2 பேர் காயம்

0 1312
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி ஒருவர் உடல் சிதறி உயிரிழப்பு; 2 பேர் காயம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி ஒருவர் உடல் சிதறி உயிரிழந்தார்.

மாரனேரி கிராமத்தில் ஸ்ரீ கிஷ்ணசாமி என்ற பெயரில் ராஜீவ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இன்று காலை வழக்கம்போல் அந்த பட்டாசு ஆலைக்கு வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் 3 பேரும், அங்குள்ள அறையை திறந்துள்ளனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக மருந்து உராய்வு ஏற்பட்டு, வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், 6 அறைகள் இடிந்து தரைமட்டமானது.

தொழிலாளர்கள் 3 பேரில் ஒருவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்ற 2 பேரும் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆலையின் போர்மேன் முத்துராஜ் மற்றும் மேலாளர் கோமதிராஜ் ஆகிய இருவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments