இந்தியாவில் உச்சத்தை நோக்கி கொரோனா தொற்று..! கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்தை கடந்தது பாதிப்பு

இந்தியாவில் உச்சத்தை நோக்கி கொரோனா தொற்று..! கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்தை கடந்தது பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி விட்டது.
சுகாதார அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின் படி ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 558 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு ஒரே நாளில் 478 பேர் பலியாகி விட்டதாகவும், 7 லட்சத்து 41 ஆயிரத்து 830 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 7 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 163 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Comments