ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக 22 ஆட்டங்களில் வென்று புதிய சாதனை..!

ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக 22 ஆட்டங்களில் வென்று புதிய சாதனை..!
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியை வென்றதன் மூலம், சர்வேதச ஒரு நாள் போட்டியில் 22 ஆட்டங்கள் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி, புதிய உலக சாதனையை படைத்தது.
நியூசிலாந்துக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 38.3 ஓவரில் 215 ரன்கள் குவித்து அதிரடி வெற்றி பெற்றது. இதன்மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் தொடர்ச்சியாக 22 ஆட்டங்கள் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை பெற்றது.
Comments