நாக்பூரில் கொரோனா தொற்றால் இறந்த பெண்ணின் உறவினர்கள் ஆத்திரம்: மருத்துவமனை வரவேற்பு பகுதிக்கு தீ வைப்பு

0 1065
நாக்பூரில் கொரோனா தொற்றால் இறந்த பெண்ணின் உறவினர்கள் ஆத்திரம்: மருத்துவமனை வரவேற்பு பகுதிக்கு தீ வைப்பு

நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் இறந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையின் வரவேற்பு பகுதியை தீ வைத்து எரித்தனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஹோப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்ததாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மருத்துவரிடம் ரகளையில் ஈடுபட்டதுமில்லாமல், வரவேற்பு பகுதியை தீ வைத்து எரித்துள்ளனர்.

இக்காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்ததன் அடிப்படையில் 10 பேரை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments