தேர்தலில் வாக்களிப்பதற்காக 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம்..!

சென்னையிலிருந்து கடந்த 4 நாட்களில் மட்டும் 4 லட்சத்துக்கு மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம்..!
சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னையிலிருந்து கடந்த 4 நாட்களில் மட்டும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
234 தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் கடந்த 1ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
சென்னையிலிருந்து மட்டும் 3 ஆயிரத்து 90 சிறப்பு பேருந்துகள் உட்பட 14 ஆயிரத்து 215 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் செல்கின்றன.
Comments