ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் பங்களா அருகே முட்புதரிலிருந்து ரூ.91.67 லட்சம் ரொக்கம் பறிமுதல்..!

0 2013
ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் பங்களா அருகே முட்புதரிலிருந்து ரூ.91.67 லட்சம் ரொக்கம் பறிமுதல்..!

ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமாரின் பங்களா அருகே, முட்புதரிலிருந்து 91.67 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது தொடர்பாக அவர் மீது, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல் உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வானாபாடி பகுதியில், எஸ்.எம்.சுகுமாருக்கு சொந்தமான பங்களாவில் 20 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும், முப்பதுக்கும் மேற்பட்ட மர்ம நபர்களும் ஒன்றாகக் கூடி இருப்பதாக கிடைத்த தகவல் கிடைத்த து. இதனை அடுத்து, தேர்தல் பறக்கும் படையினர், ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பூரணி மற்றும் சார் ஆட்சியர் இளம்பகவத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் 27 பேர் போலீசார் உதவியுடன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 28 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முட்புதரிலிருந்து கைப்பற்றப்பட்ட பணம் யாருடையது, சித்தூரில் இருந்து வரவழைக்கப்பட்டவர்கள் பணப்பட்டுவாடா செய்ய பயன்படுத்தப்பட்டனரா? பங்களாவில் அடைத்து வைத்து தாக்கப்பட்டனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments