ராஜஸ்தானில் ஞாயிறு மற்றும் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு: மாநிலத்திற்குள் நுழைந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்

ராஜஸ்தானில் ஞாயிறு மற்றும் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு: மாநிலத்திற்குள் நுழைந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்
ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
திரையரங்குகள், வணிக வளாகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகள், உணவகங்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்கள் அரசின் அனுமதியை பெற்று இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊரடங்கு விதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்திற்குள் நுழைந்தவர்களுக்கும், வெளியே பயணம் செய்பவர்களுக்கும், திரும்பி வருபவர்களுக்கும் கொரோனா சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Comments