மகாராஷ்டிராவில் இன்று முதல் மீண்டும் இரவு நேர ஊரடங்கு..!

0 1894
மகாராஷ்டிராவில் இன்று முதல் மீண்டும் இரவு நேர ஊரடங்கு..!

காராஷ்டிராவில் ஒரே நாளில் 57 ஆயிரம் பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், இதனைக் கட்டுப்படுத்த இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை அமலில் இருக்கும். ஊரடங்கின் போது மருந்தகங்கள், காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தவிர ஏனைய கடைகள் இரவு நேரத்தில் இயங்காது. வணிக வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவை இம்மாத இறுதிவரை இயங்காது.

மதவழிபாட்டுத் தலங்கள் மூடப்படுவதுடன், உணவகங்கள், சாலையோரக் கடைகளில் அமர்ந்து சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு தவிர ஏனைய பள்ளி, கல்லூரிகளும் மூடப்படுகின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments