பாதுகாப்பான வாக்குப்பதிவு..! அறிவுரைகளும் வழிமுறைகளும்

0 1956
பாதுகாப்பான வாக்குப்பதிவு..! அறிவுரைகளும் வழிமுறைகளும்

வாக்குச்சாவடிக்கு வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

தமிழ்நாட்டில், நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தலை பாதுகாப்பாக நடத்தும் பொருட்டு, வாக்காளர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவின் போது வரிசையில் தனிநபர் இடைவெளியுடன் நிற்க வேண்டும், வாக்குச்சாவடிக்குள் ஒருவர் மட்டுமே நுழைய வேண்டும், உள்ளே நுழைந்தபின் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் வாக்காளர்களின் உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்பட்டு, வலது கைக்கு மட்டும் கையுறை வழங்கப்படும்.

வாக்காளர்களின் உடல் வெப்பநிலை சராசரியை விட மிக அதிகமாக இருந்தாலும், கொரோனோ வைரஸ் பாதிப்பு இருந்தாலும், சிகிச்சை முடிந்து தனிமையில் இருந்தாலும் அவர்கள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை தனியே வந்து வாக்களிக்கலாம். வாக்குச்சாவடியிலேயே கொரோனா கவச உடையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிக்குள் அமர்ந்திருக்கும் முதல் அலுவலர் வாக்காளர்களின் முகக்கவசத்தை அகற்றச் சொல்லி அடையாள அட்டையை பரிசோதிப்பார். இரண்டாவது அலுவலர் விரலில் மை வைத்தவுடன், மூன்றாவது அலுவலர் பூத் சிலிப்பை பரிசோதித்து அனுப்புவார்.

வாக்களிக்கும் இடத்திற்கு சென்று கையுறை அணிந்த வலது கை விரல்களால் விருப்பத்துக்குரிய சின்னம் பொறித்த பட்டனை அழுத்தியபின் பீப் சத்தம் வருவதையும், வேட்பாளர் பெயருக்கு அருகிலுள்ள சிகப்பு விளக்கு எரிவதையும் காணலாம். அருகிலுள்ள விவிபேட் இயந்திரத்தில் வாக்களித்த வேட்பாளரின் சின்னம் பிரிண்ட் செய்யப்பட்டு 7 வினாடிகள் காண்பிக்கப் படுவதையும் வாக்காளர்கள் உறுதி செய்யலாம்.

வாக்களித்த பின் வாக்குசாவடி மையத்தின் வெளியே வந்து கையுறையை கழற்றி அதற்குரிய பிளாஸ்டிக் குப்பை பையில் போட்டுவிட்டு வாக்குச்சாவடி மையத்தை விட்டு வெளியேற வேண்டும். வாக்குச் சாவடிக்குள் வாக்குச்சாவடி தலைமை அலுவலரைத் தவிர வாக்காளர்கள், முகவர்கள் உள்ளிட்ட யாரும் கைபேசி கொண்டு செல்ல அனுமதி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments