கொரோனா பரவல் எதிரொலி : மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு அமல்..!

0 3318

மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, திங்கட்கிழமை முதல் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 24 மணி நேர முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை இரவு நேர ஊரடங்கும் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள், மால்கள் மற்றும் பார்கள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு இடத்தில் ஐந்து பேருக்கு மேல் கூடுவதற்கு அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வார இறுதி நாட்களில், அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்தும் செயல்பட தடைவிதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments