தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,581 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3500ஐ கடந்தது
தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3,500 - ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,581 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அமீரகத்தில் இருந்து தமிழகம் வந்த ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற ஆயிரத்து 813 பேர் குணமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சென்னையைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி ஒருவர் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
சென்னை பெருநகரில், கொரோனா பாதிப்பு, தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. கோயம்புத்தூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மற்றும் காஞ்சிபுரம் உள்பட 14 மாவட்டங்களில் வைரஸ் தொற்று பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருவதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Comments