தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் கடந்த ஆண்டைவிட அதிகம்..!
தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 42, 834 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளது.
2020ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் நாள் தமிழகத்தில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன்பின் கொரோனா பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து ஜூன் மாதத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 167 ஆக இருந்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா பரவல் மார்ச் மாதத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த ஆண்டில் இதுவரை 42 ஆயிரத்து 834 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் இரண்டாவது வாரத்தில் இருந்த நிலைமையாகும்.
இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 20 ஆயிரத்து 204 பேர் தற்போதைய கொரோனா நோயாளிகளாக உள்ளனர். பரிசோதனைகளைப் பன்மடங்கு அதிகரிக்க வேண்டும் என்றும், 24 மணி நேரத்துக்குள் சோதனை முடிவுகள் கிடைக்க வேண்டும் என்றும் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்குப் பொது சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தொற்று அதிகமுள்ள பகுதிகளில் தடுப்பூசி முகாம்களைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
Comments