தொகுதிக்கு உழைக்கத்தான் இந்த உசுரு: சுகாதார அமைச்சரின் சென்டிமென்ட் வீடியோ..!

0 2931

கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை தொகுதிக்காக உழைப்பேன், விராலிமலை பூமிதான் நான் கும்பிடும் சாமி எனக் கம்மும் குரலில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

வேட்பாளர்களின் போட்டிப் பிரச்சாரங்களால் காரசாரமாக காட்சியளிக்கும் தொகுதிகளுக்கு மத்தியில், கண்ணீர்மல்க விடுக்கும் வேண்டுகோள்களால் புதுக்கோட்டை விராலிமலை தொகுதி சென்டிமென்ட் மயமாக காட்சியளிக்கிறது. அங்கு திமுக சார்பில் போட்டியிடும் தென்னலூர் பழனியப்பன் தமக்கு ஒருமுறை வாய்ப்பளிக்குமாறு தேம்பித் தேம்பி அழுத வீடியோ வைரலானது.

இந்நிலையில், விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான விஜயபாஸ்கரும், சென்டிமென்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஏற்கெனவே ஒருமுறை தனக்கு பிபி, சுகர், தலைசுற்றல் இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் சென்டிமென்ட்டாக பேசிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments