தொடர் விடுமுறை எதிரொலி: தமிழகத்தில் நேற்று மட்டும் ரூ.160கோடிக்கு மதுவிற்பனை..!

தொடர் விடுமுறை எதிரொலி: தமிழகத்தில் நேற்று மட்டும் ரூ.160கோடிக்கு மதுவிற்பனை..!
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் நேற்று 160 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவையொட்டி, இன்று முதல் வரும் 6ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
3 நாட்களுக்கு தொடர் விடுமுறை என்பதால், நேற்று டாஸ்மாக் கடைகள் திறந்ததிலிருந்தே மதுபிரியர்கள் மொத்தமாக மதுவை வாங்கி சென்றனர். இதனால் வழக்கமாக 100கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் மதுபாட்டில்கள் நேற்று 160 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளன.
Comments