கேரளாவில் இன்று இரவு ஏழு மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது..! நாளை மறுநாள் 140 தொகுதிகளில் வாக்குப்பதிவு

கேரளாவில் இன்று இரவு ஏழு மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது..! நாளை மறுநாள் 140 தொகுதிகளில் வாக்குப்பதிவு
கேரளத்திலும் அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளிலும் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
கேரளத்தில் மொத்தமுள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் ஆறாம் நாள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் இறுதிக்கட்டப் பிரச்சாரம் செய்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று இரவு 7 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதேபோல் அசாமில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்டமாக 40 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்டமாக 31 தொகுதிகளிலும் ஏப்ரல் ஆறாம் நாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்தத் தொகுதிகளிலும் இன்று இரவு 7 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது.
Comments