தந்தைக்கு ஆதரவாக களமிறங்கிய மகள்..! நடனம் ஆடி ஓட்டு கேட்ட அக்ஷரா ஹாசன்

0 4848
தந்தைக்கு ஆதரவாக களமிறங்கிய மகள்..! நடனம் ஆடி ஓட்டு கேட்ட அக்ஷரா ஹாசன்

கோவை தெற்கு தொகுதியில் களம் காணும் தனது தந்தை கமல்ஹாசனுக்கான நடிகை அக்ஷரா ஹாசன் நடனமாடி வாக்காளர்களை உற்சாகப்படுத்தி ஆதரவு திரட்டினார்.

கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான அக்ஷரா ஹாசன், கையில் டார்ச் லைட்டுடன் கோவை தெற்கு தொகுதியில் வலம் வந்து ஆதரவு திரட்டி வருகிறார். அக்ஷராவுடன் கமல்ஹாசனின் அண்ணன் மகளும் பிரபல நடிகையுமான சுஹாசினியும், பிரச்சாரம் செய்து வருகிறார்.

கோவை தெற்கு தொகுதியில் இன்று மேளதாளங்கள் முழங்க பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை அக்ஷரா ஹாசனை, அங்கிருந்த பெண்கள் நடனமாடும்படி கேட்டுக் கொண்டனர். முதலில் தயக்கம் காட்டிய அக்ஷ்ரா பின்னர், வாக்காளர்களை உற்சாகப்படுத்த நடனம் ஆடினார்.

அக்ஷராவின் நடனத்தை கண்டு அங்கிருந்த பெண்களும் உற்சாக மிகுதியில் நடனமாட தொடங்கிய நிலையில், அந்த இடமே கலகலப்பானது.

தன் பங்குக்கு சுஹாசினியும், மக்கள் நீதி மய்யம் சின்னமான டார்ச் லைட்டுடன் சுற்றி சுற்றி நடனமாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments