தமிழக விவசாய கூட்டமைப்பு நிர்வாகிகள் முதலமைச்சருடன் சந்திப்பு: சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு என அறிவிப்பு

0 2225
தமிழக விவசாய கூட்டமைப்பு நிர்வாகிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு: சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு என அறிவிப்பு

மிழக விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் சண்முகம், செயலாளர் பழனிவேல், பொருளாளர் ரவிக்குமார் மற்றும் விவசாயிகள் சந்தித்தனர். மேட்டூர் உபரி நீரை, நீரேற்ற முறையின் மூலம் வசிஷ்ட நதியில் விட வேண்டும் என்றும், இந்த திட்டத்தின் மூலம் நான்கு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன் அடைவார்கள் என்றும் அவர்கள் முதலமைச்சரிடம் தெரிவித்தனர்.

இதுதவிர பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முதலமைச்சரிடம் தெரிவித்தனர். அவற்றை கவனத்துடன் கேட்ட முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் ராமசாமி, முதலமைச்சரின் நேரில் சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்ததாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments