”திமுகவின் வெற்றியைத் தடுப்பதற்காக அதிமுகவினர் பொய்ப் பிரச்சாரம்” -மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

0 2044
”திமுகவின் வெற்றியைத் தடுப்பதற்காக அதிமுகவினர் பொய்ப் பிரச்சாரம்” -மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

திமுகவின் வெற்றியைத் தடுப்பதற்காக அதிமுகவினர் பொய்ப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விடுவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து ஐஸ்ஹவுஸ் பகுதியில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

திமுக மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்றால், 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை? என்றும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தனது மகள் வீட்டில் ஐடி ரெய்டுக்கு வந்தவர்கள், டீ குடித்து, பிரியாணி சாப்பிட்டு, டிவி பார்த்துவிட்டு சென்றதாக குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், அச்சுறுத்தல்கள் மூலம் திமுகவின் வெற்றியைத் தடுத்துவிட முடியாது என்றார்.

சென்னை துறைமுகம் தொகுதி வேட்பாளர் பி.கே.சேகர்பாபு, ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர், மாதவரம் தொகுதி வேட்பாளர் சுதர்சனன், பெரம்பூர் தொகுதி வேட்பாளர் ஆர்.டி.சேகரை ஆகியோரை ஆதரித்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments