தேர்தல் பிரச்சாரத்தில் கடவுளர்களின் உருவங்களை பயன்படுத்தியதாக புகார்: ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு

0 2288
தேர்தல் பிரச்சாரத்தில் கடவுளர்களின் உருவங்களை பயன்படுத்தியதாக புகார்: ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு

தேர்தல் பிரச்சாரத்தின் போது கடவுளர்களின் உருவங்களை பயன்படுத்தியதாக மக்கள் நீதி மய்யத்தின் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பிரச்சார வாகனத்தில் கடவுளர் வேடமிட்ட நபர்கள் டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொது மக்களிடையே பிரச்சாரம் செய்தனர்.

இது தேர்தல் பிரச்சார விதிகளுக்கு எதிரானது என காட்டூர் காவல் நிலையத்தில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பழனிக்குமார் என்ற சுயேச்சை வேட்பாளர் புகார் அளித்தார்.

அதன்பேரில் கடவுளர் உருவங்களை பிரசாரத்தில் பயன்படுத்தியதாக கமல்ஹாசன் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments