முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கு: சச்சின் வாஸே கணக்கில் இருந்து கைதுக்கு பின் ரூ.26.5 லட்சம் எடுக்கப்பட்டுள்ளதாக NIA தகவல்

0 2222
சச்சின் வாஸே கைது செய்யப்பட்டு 5 நாட்களுக்குப் பின் வங்கி கணக்கில் இருந்து ரூ.26.5 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது -என்ஐஏ தகவல்

மும்பையில் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்கள் இருந்த காரை நிறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் சச்சின் வாஸேவின் வங்கிக் கணக்கில் அவர் கைதுக்குப் பின்னர் 26 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிறப்பு நீதிமன்றத்தில் அளித்துள்ள தகவலில், சச்சின் வாஸே தனது உதவியாளருடன் இணைந்து வெர்சோவா என்ற இடத்தில் டெவலப்மென்ட் கிரடிட் வங்கி என்ற வங்கியில் கணக்கு தொடங்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

வாஸே கைது செய்யப்பட்டு 5 நாட்களுக்குப் பின் வங்கிக் கணக்கில் இருந்து 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாகவும், அதனை எடுத்தது யார் என்பது குறித்து அறிய வாஸைவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments