ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா..!

0 1048
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி..!

ம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கொரேனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது மகன் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பதிவில், தனது தந்தை ஸ்ரீநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள அவரது உடல் நலத்திற்கு அனைவரும் பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

பரூக் அப்துல்லா விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 2ம் தேதி பரூக் அப்துல்லா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments