ஒடிசா சட்டப்பேரவையில் சபாநாயகரை நோக்கி செருப்பு, குப்பைக் கூடையை வீசிய பாஜக எம்எல்ஏக்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவு

0 1640
ஒடிசா சட்டப்பேரவையில் சபாநாயகரை நோக்கி செருப்பு, குப்பைக் கூடையை வீசிய பாஜக எம்எல்ஏக்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவு

டிசா சட்டப்பேரவையில் சபாநாயகரை நோக்கி பாஜக எம்எல்ஏக்கள் செருப்பு, குப்பைக் கூடையை வீசியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அம்மாநில சட்டப் பேரவையில் நேற்று சுரங்க ஊழல் குறித்து விவாதிக்குமாறு காங்கிரஸ் உறுப்பினர்கள் நோட்டீஸ் அளித்திருந்தனர். அதனை நிராகரித்த சபாநாயகர் எஸ்.என். பட்ரே, லோக் ஆயுக்தா திருத்த மசோதா விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாஜக எம்எல்ஏக்களான ஜே.என். மிஸ்ரா மற்றும் பி.சி. சேத்தி ஆகியோர் சபாநாயகரை நோக்கி செருப்பு, குப்பைக் கூடை, பேனா உள்ளிட்ட பொருட்களை வீசி எறிந்தனர்.

இதையடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு தொடர்பாக 3 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments