அசாமில் ஊருக்குள் புகுந்த 2 காண்டா மிருகங்களால் பெரும் பீதி..! பயிர்களை சேதம் செய்து ஊர் மக்களைக் காயப்படுத்தின

0 1117
அசாமில் ஊருக்குள் புகுந்த 2 காண்டா மிருகங்களால் பெரும் பீதி..! பயிர்களை சேதம் செய்து ஊர் மக்களைக் காயப்படுத்தின

ஸ்ஸாம் மாநிலம் டாரங் மாவட்டத்தில் இரண்டு காண்டாமிருகங்கள்,குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து பீதியை ஏற்படுத்தின.

அங்கிருந்த தக்காளி உள்ளிட்ட பயிர்களை இவை சேதம் செய்தன. இதையயடுத்து காவல்துறையினரும் வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு காண்டாமிருகங்களையும பிடிக்க முயற்சித்தபோது தாறுமாறாக ஓடிய அவை சிலரை காயப்படுத்தின.

ஒரு காண்டாமிருகம் வனத்துறையினரிடம் சிக்கியது.மயக்க ஊசி போட்டு அதை வனவிலங்குப் பூங்காவுக்கு அனுப்பி வைத்தனர்.மற்றொரு காண்டாமிருகம் அமைதியாக போய் குளத்தில் உட்கார்ந்துக் கொண்டது. அதன் நடமாட்டத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments