ஹெல்மெட்டுடன் பிரச்சாரத்துக்கு புறப்பட்ட பாஜ.க..!

0 1828
ஹெல்மெட்டுடன் பிரச்சாரத்துக்கு புறப்பட்ட பாஜ.க..!

அரசியல் கட்சியினர் ஹெல்மெட் இல்லாமல் இரு சக்கரவாகன பேரணி செல்வதை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், கன்னியாகுமரி பாரதீய ஜனதா கட்சியினர் முன் எச்சரிக்கையாக ஹெல்மெட் அணிந்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.

சாமானியர்களை போல பிரச்சாரத்திற்கு செல்லும் அரசியல் கட்சியினரும் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் இரு சக்கர வாகன பேரணிக்கான அனுமதிக்கு வாகன் எண்ணிக்கையை குறைத்தும், ஹெல்மெட் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்த தொடங்கியுள்ளனர்.

அதன்படி கன்னியாகுமரி மக்களவை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து நடைபெற்ற இரு சக்கர வாகன பேரணியில் பங்கேற்ற பாஜகவினர், மற்ற கட்சியினருக்கு முன் மாதிரியாக தலைவசம் அணிந்து பங்கேற்றனர். அவர்கள் ஹெல் மெட்டுடன் கட்சியின் சின்னமான தாமரையையும் இணைத்து வைத்திருந்தனர்

காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துடன் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசார், குறைந்த வாகனங்களில் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

அப்போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் ஒன்று கடந்து செல்ல, போலீசாருடன் சேர்ந்து காங்கிரசாரும் முனைப்பு காட்டினர்

அதே நேரத்தில் தூத்துக்குடியில் குறைந்த இரு சக்கர வாகனங்களுடன் மீனவ கிராமங்களுக்கு வாக்கு சேகரிக்க சென்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வேல்ராஜ், போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். உடனடியாக ஆதரவாளர்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட அவர் தங்களை வழி மறித்தது ஏன் ? என்று கேள்வி எழுப்பினார். தாங்கள் பிச்சை எடுத்து கட்சி நடத்தும் எளிய பிள்ளைகள் என்றும் தங்களை மறிப்பது ஏன் என்று ஆதங்கப்பட்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments