மகாராஷ்ட்ராவில் 2 நாட்களுக்குள் முழு ஊரடங்கு அமல்? -உத்தவ் தாக்கரே எச்சரிக்கை
மகாராஷ்டிராவில் இன்னும் இரண்டு நாட்களுக்குள் முழு ஊரடங்கு அமலுக்கு வரலாம் என முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தகவல்
மகாராஷ்ட்ராவில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 50 ஆயிரத்தை நெருங்கிய நிலையில், இன்னும் இரண்டு நாட்களுக்குள் முழு ஊரடங்கு அமலுக்கு வரலாம் என்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
பாதிப்புகள் பத்து மடங்கு உயர்ந்துள்ள நிலையில் ஊரடங்கை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறிய உத்தவ் தாக்கரே, இரண்டு நாட்களில் அதிகாரிகளுடன் ஆலோசித்து இதனை அறிவிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
மும்பை போன்ற மக்கள் தொகை அதிகமாக உள்ள நகரங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்று தெரிவித்த உத்தவ் தாக்கரே இப்பிரச்சினைத் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள், உள்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து வருவதாக கூறினார்.
Comments