”ஒரு அதிமுக உறுப்பினர் வந்தாலும் அவர் பாஜக உறுப்பினராகச் செயல்படுவார்” -மு.க.ஸ்டாலின் விமர்சனம்

0 1503
”ஒரு அதிமுக உறுப்பினர் வந்தாலும் அவர் பாஜக உறுப்பினராகச் செயல்படுவார்” -மு.க.ஸ்டாலின் விமர்சனம்

வரும் தேர்தலில் ஒரு அதிமுக உறுப்பினர் வெற்றி பெற்றாலும் அவர் பாஜக உறுப்பினரைப் போலத்தான் செயல்படுவார் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் எழிலனை ஆதரித்து நமச்சிவாயபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுக்க சென்றாலும் ஆயிரம் விளக்கு வந்ததும் உற்சாகம் வந்துவிடும் என்று கூறினார்.

தான் மேயராக பணியாற்றிய போது ஆயிரம் விளக்குத் தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். பூங்காக்கள், சிமெண்ட் சாலை மேம்பாலங்கள் என நிறைய செய்துள்ளதாகவும், அந்த உரிமையில் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அதிமுகவில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் வெற்றி பெற்றாலும் அவர் பாஜக உறுப்பினராகி விடுவார் என மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆயிரம் விளக்குத் தொகுதியில் தான் செல்லாத இடங்கள், தெருக்கள் இல்லை என்று குறிப்பிட்ட ஸ்டாலின், அனைத்து நிர்வாகிகளையும் தனக்கு தெரியும் என்றும், தன்னை முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினர் ஆக்கிய தொகுதி என்றும் பேசினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments