தமிழகத்தில் ஒரு மாதமாக நடந்து வந்த அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 7 மணியுடன் ஓய்கிறது..!

0 2257
தமிழகத்தில் ஒரு மாதமாக நடந்து வந்த அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 7 மணியுடன் ஓய்கிறது..!

தமிழகத்திலும் புதுச்சேரியிலும் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வு பெறுகிறது.முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல், மார்ச், 12ல் துவங்கி, 19ல் நிறைவடைந்தது.

மறுநாள், 20ம் தேதி, வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. தமிழகத்தில், 234 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட, மொத்தம், 3,998 பேர் களத்தில் உள்ளனர். அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி , மநீமய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக என ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது.

வழக்கமாக மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடியும் நிலையில், கூடுதலாக 2 மணி நேரம் பிரச்சாரத்துக்கு அனுமதியளித்துள்ள தேர்தல் ஆணையம் இரவு 7 வரை வாக்கு சேகரிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை 7 மணியுடன் தமிழகம், புதுச்சேரியில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.

முதல்வர் பழனிசாமி, எடப்பாடியிலும், துணை முதல்வர்பன்னீர்செல்வம்., போடியிலும், ஸ்டாலின் கொளத்தூரிலும், கமல் கோவை தெற்கு தொகுதியிலும், சீமான், திருவொற்றியூரிலும் பிரசாரத்தை நிறைவு செய்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments