இயற்கையும், மக்களும் நமக்கு சாதகம்; மீண்டும் அதிமுக ஆட்சி -முதலமைச்சர் உறுதி.!

0 2378
இயற்கையும், மக்களும் நமக்கு சாதகம்; மீண்டும் அதிமுக ஆட்சி -முதலமைச்சர் உறுதி.!

தமிழ்நாட்டில், இயற்கையும், மக்களும் சாதகமாக இருப்பதால், அதிமுகவின் ஆட்சி மீண்டும் அமைவது உறுதி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.மணி, மேட்டூர் தொகுதி பாமக வேட்பாளர் சதாசிவம் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

சேலம் மாவட்டத்தில் தாம் போட்டியிட்ட எடப்பாடியை விட, அதிகமுறை ஓமலூருக்கு வந்து சென்றிருப்பதாக கூறிய முதலமைச்சர், சேலம் மாவட்ட மக்களின் அத்தனை பிரச்சனைகளையும் தாம் நன்கறிந்திருப்பதாகத் தெரிவித்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக ஆட்சியை தொடர்ந்து வருவதாகத் தெரிவித்த அவர், நிறைவேற்றப்பட்ட மற்றும் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து, எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்வதாக கூறினார். 

இயற்கையும், மக்களும் சாதகமாக இருப்பதால், மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்றும், இதனை யாராலும் தடுக்க முடியாது என்றும், இ.பி.எஸ் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக அரசு சிறுபான்மை மக்களை கண்ணின் இமைபோல பாதுகாத்து வருவதாக எடப்பாடி கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments