ஆயுள்காப்பீட்டு நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி மூதாட்டியிடம் ரூ. 2.13 கோடி மோசடி: டெல்லியைச் சேர்ந்த 6 பேர் கைது

0 2317
ஆயுள்காப்பீட்டு நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி மூதாட்டியிடம் ரூ. 2.13 கோடி மோசடி: டெல்லியைச் சேர்ந்த 6 பேர் கைது

யுள் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த மூதாட்டியிடம் 2 கோடி ரூபாயை மோசடி செய்த டெல்லியைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மந்தைவெளியைச் சேர்ந்த சுதா ஸ்ரீதரன் என்ற அந்த மூதாட்டியின் கணவர் ஸ்ரீதரன் இறந்துவிட்ட நிலையில், ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து பேசுவதாக மர்ம நபர்கள் சிலர் சுதாவை போனில் அழைத்துள்ளனர். கணவர் ஸ்ரீதரன் பாலிசி எடுத்திருந்ததாகவும் அதன் முதிர்ச்சித் தொகையைப் பெற முன் தொகை செலுத்த வேண்டும் என்றும் அவரிடம் கூறியுள்ளனர்.

அதனை நம்பி பல்வேறு கட்டங்களாக 2 கோடியே 13 லட்ச ரூபாய் வரை மோசடி கும்பல் தெரிவித்த வங்கிக் கணக்கில் செலுத்தி இருக்கிறார் சுதா. ஆனால் முதிர்வுத் தொகை கடைசிவரை கிடைக்காத நிலையில், மர்ம நபர்களின் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகாரின் பேரில் தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கிய மத்திய குற்றப்பிரிவு போலீசார், டெல்லியைச் சேர்ந்த 6 பேரை கைது செய்தனர். அவர்களை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டி வெகுமதிகளை வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments