”மகாராஷ்டிராவில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆல் பாஸ்” -மகாராஷ்டிரா கல்வி வாரியம் அறிவிப்பு

”மகாராஷ்டிராவில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆல் பாஸ்” -மகாராஷ்டிரா கல்வி வாரியம் அறிவிப்பு
மகாராஷ்டிராவில் கொரோனா பெருந்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதன் எதிரொலியாக, அம்மாநிலத்தில், ஒன்று முதல் 8ஆம் வகுப்புகள் வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மகாராஷ்டிரா மாநில கல்வி வாரியம், ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு வைக்காமல், உயர் வகுப்புகளுக்கு மாற்றுமாறு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, கொரோனா பரவல் தாக்கம் ஒன்றிரண்டு நாட்களில் குறையாவிட்டால், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments