சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை கொளத்தூர் தொகுதியில் நிறைவு செய்கிறார் மு.க.ஸ்டாலின்

0 1166
சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை கொளத்தூர் தொகுதியில் நிறைவு செய்கிறார் மு.க.ஸ்டாலின்

சென்னையில் மு.க.ஸ்டாலின் இறுதிகட்ட சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

இந்நிலையில் பிரசாரத்தின் கடைசி தினமான 4 ஆம் தேதி அன்று அவர், சென்னையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். 4 ஆம் தேதி காலை சேப்பாக்கம் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கும் அவர், துறைமுகம், ஆர்.கே.நகர், பெரம்பூர், மாதவரம், அண்ணாநகர், வில்லிவாக்கம், எழும்பூர், திரு.வி.க. நகர் தொகுதிகளில் ஆதரவு திரட்டுகிறார்.

மாலை 5 முதல் பிரசார நேரம் முடியும் வரை அவர் தாம் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் வாக்கு சேகரிக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments