”தமிழகத்தின் உரிமையை தி.மு.க. நிலை நாட்டும்” -மு.க.ஸ்டாலின்

0 1778
”தமிழகத்தின் உரிமையை தி.மு.க. நிலை நாட்டும்” -மு.க.ஸ்டாலின்

ட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, தமிழகத்தின் உரிமையை திமுக நிச்சயம் நிலைநாட்டும் என்று அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேதாரண்யம், புதுச்சேரி, சென்னை உள்பட பல ஊர்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், வருமான வரி சோதனைகளை கண்டு திமுக ஒருபோதும் அஞ்சாது என்றார். தேர்தல் பணியைச் செய்ய விடக்கூடாது என்பதற்காகவே சோதனை நடத்தப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்ற அவர், அதன் பின்னர் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படுமென உறுதி அளித்தார்.

அதிமுக ஆட்சியால் தமிழகம் 50 ஆண்டுகள் பின் தங்கி விட்டதாக கூறிய ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்த பின் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றார்.

தேர்தல் பிரசாரத்தின் போது அவர், வேதாரண்யம் தொகுதி வேட்பாளர் எஸ்.கே.வேதரத்தினம், கீழ்வேளூர் தொகுதி வேட்பாளர் மாலி, நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளர் ஆளூர் ஷா நவாஸ், திருத்துறைப்பூண்டி வேட்பாளர் மாரிமுத்து ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார்.

இதே போன்று புதுச்சேரியில் போட்டியிடும் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கும் அவர் வாக்கு சேகரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments