விடுதியில் கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருட்கள்-லஞ்சம் பெற்று பொருட்களை விடுவித்ததாக காவலர்கள் மீது புகார்

0 998

சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு விடுதியில் கைப்பற்றப்பட்ட 800 கிராம் தங்கம், 64 வெளிநாட்டு மதுபாட்டில்கள், 32 வெளிநாட்டு சிகரெட்டுகள், 10 விலை உயர்ந்த செல்போன்களை கணக்கில் காட்டாமல் மறைத்ததாக 4 காவலர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரகசியத் தகவலின் பேரில் அவ்விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில் அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், இதில் தொடர்புடைய 5 பேரை கைது செய்தனர். இந்நிலையில் 64 மதுபாட்டில்களை மட்டும் கணக்கு காட்டி பிறவற்றை லஞ்சம் பெற்றுக் கொண்டு விடுவித்ததாக ஆய்வாளர் உட்பட 4 காவலர்கள் மேல் புகார் எழுந்தது. இதனையடுத்து அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments