கொரோனா பாதித்த தேர்தல் பார்வையாளரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தயக்கம் காட்டிய ஓட்டுநர்: சட்டென்று தனது சொந்த காரில் அழைத்துச் சென்ற மாவட்ட ஆட்சியர்..!

0 2074
கொரோனா பாதித்த தேர்தல் பார்வையாளரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தயக்கம் காட்டிய ஓட்டுநர்: சட்டென்று தனது சொந்த காரில் அழைத்துச் சென்ற மாவட்ட ஆட்சியர் அன்பழகன்..!

துரை மாவட்ட தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த உத்திரப்பிரதேச ஐபிஎஸ் அதிகாரிக்கு கொரோனா உறுதியான நிலையில், அவரை தனது காரில் அமரவைத்து, தாமே ஓட்டிச் சென்று மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார் மாவட்ட ஆட்சியர் அன்பழகன்.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தரம் வீர் யாதவ் என்ற அந்த அதிகாரி, தேர்தல் கண்காணிப்புப் பணிக்காக மதுரை வந்துள்ளார். கடந்த சில தினங்களாக இருமல் மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தவருக்கு, பரிசோதனையில் கொரோனா உறுதியானதாக குறுந்தகவல் வந்துள்ளது.

தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி, தனது கார் ஓட்டுநரிடம் கூறியிருக்கிறார் அந்த அதிகாரி. கொரோனா அச்சம் காரணமாக அந்த ஓட்டுநர் மறுக்கவே, மேலும் சில ஓட்டுநர்களை அணுகியிருக்கிறார். அவர்களும் கார் ஓட்ட முன்வராத நிலையில், விவகாரம் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கவனத்துக்குச் சென்றுள்ளது.

உடனடியாக கவச உடையை அணிந்துகொண்டு தனது காரில் கிளம்பிய மாவட்ட ஆட்சியர் அன்பழகன், தரம் வீர் யாதவை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் இந்த செயல், பாராட்டுகளை பெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments