வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

0 2008

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், வருகிற 7-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி வீசுவதால், 5 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட சுமார் 6 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலான இடங்களில் அனல்காற்று வீசக்கூடும் என்பதால், நண்பகல் 12 மணியில் இருந்து 4 மணிவரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்பதால், வடக்கு அந்தமான், மன்னார்வளைகுடா கடல் பகுதிக்கு 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments