நடிகை குஷ்பூ மீது தேர்தல் விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

0 2160
நடிகை குஷ்பூ மீது தேர்தல் விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பா.ஜ.க.வேட்பாளர் நடிகை குஷ்பூ மீது தேர்தல் விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை குஷ்பூ அங்குள்ள மசூதிக்கு சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, வழிபாட்டு தலங்கள் முன்பு, பிரச்சாரத்தில் ஈடுபட கூடாது என்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனாலும், அறிவுறுத்தலை மதிக்காமல் தொடர்ந்து குஷ்பூ பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக பறக்கும் படை போலீசார் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் நடிகை குஷ்பூ மீது தேர்தல் விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments