ஒரே ஒரு முறை வாய்ப்பு தாருங்கள்...! கண்ணீர் விட்டு கெஞ்சிய திமுக வேட்பாளர்!

0 18009
ஒரே ஒரு முறை வாய்ப்பு தாருங்கள்...! கண்ணீர் விட்டு கெஞ்சிய திமுக வேட்பாளர்!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன், ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என கண்ணீர் விட்டு செண்டிமெண்ட்டாக கெஞ்சும் வீடியோ வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட விராலிமலை சட்டமன்ற தொகுதி வி.ஐ.பி. தொகுதியாக கருதப்படுகிறது. அதிமுக சார்பில் விராலிமலை தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். திமுக சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய தென்னலூர் பழனியப்பன் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக - திமுக என இரு தரப்பினரும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல், பிரசாரம் செய்து வருகின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர் தனது குழந்தைகளையும் பிரச்சாரத்தில் களமிறக்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் தென்னலூர் பழனியப்பன் ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என கண்ணீர் விட்டு கெஞ்சும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த தேர்தலை கடைசி தேர்தலாக கருதுவதாக கூறியுள்ள பழனியப்பன், 30 ஆண்டுகாலம் அரசியலில் இருந்து மக்களுக்காக உழைத்துள்ளதாகவும், இந்த ஒரு முறை மட்டும் வாய்ப்பு தரும்படியும் கெஞ்சி கேட்கிறார்.

ஏற்கனவே தேர்தலில் நின்று தோல்வியுற்றும், தொடர்ந்து மக்கள் பணியில் சலிக்காமல் பணியாற்றிக் கொண்டிருப்பதாக கூறிய பழனியப்பன் திடீரென நெஞ்சு புடைக்க விம்மி விம்மி கண்ணீர் விட்டு அழுதார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments