பாஜக-அதிமுக கூட்டணியால் மட்டுமே பெண்கள், மீனவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் : அமைச்சர் அமித் ஷா

0 1766

மீனவர்கள், பெண்களுக்குப் பாதுகாப்பு அரணாக பாஜக - அதிமுக அரசு விளங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னை தேனாம்பேட்டை சந்திப்பில் இருந்து தியாகராயர் சாலை வழியே திறந்த வேனில் பேரணியாகச் சென்று இருபுறமும் திரண்டு நின்ற மக்களிடம் பாஜக - அதிமுக கூட்டணிக்காக வாக்குச் சேகரித்தார்.

அமித் ஷாவுடன் ஆயிரம் விளக்குத் தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு, எழும்பூர் தொகுதி கூட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியன், சைதாப்பேட்டை அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி, சோழிங்கநல்லூர் அதிமுக வேட்பாளர் கந்தன், வேளச்சேரி அதிமுக வேட்பாளர் அசோக் உள்ளிட்டோர் பேரணியில் கலந்துகொண்டனர்.

பேரணிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, திமுக - காங்கிரஸ் கூட்டணி வாரிசு அரசியல், ஊழல் கூட்டணி என குற்றம்சாட்டினார்.

திருநெல்வேலி தச்சநல்லூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக - அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார்.

அப்போது காங்கிரஸ் - திமுக கட்சிகள் பல தலைமுறைகளாக ஆட்சியில் இருந்ததாகக் குறிப்பிட்டார். இந்தத் தேர்தல் மக்களாட்சிக்கும் குடும்ப ஆட்சிக்கும் இடையே நடக்கும் தேர்தல் எனத் தெரிவித்தார். அதிமுகவும் பாஜகவும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு முழுமையாகப் பாடுபடுவதாகவும், திமுகவும் காங்கிரசும் குடும்பத்துக்காகப் பாடுபடுவதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments