பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் உடல் நிலை சீராக உள்ளது: டெல்லி எய்ம்ஸ்

பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் உடல் நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம் தகவல்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் உடல் நிலை சீராக உள்ளது என ராஷ்டிரபதி பவன் தெரிவித்துள்ளது.
கடந்த 30 ஆம் தேதி அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஐசியூவில் இருந்த அவர் இன்று சிறப்பு அறை ஒன்றுக்கு மாற்றப்பட்டார்.
மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.
Comments