திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் இல்லம் உள்பட பல்வேறு இடங்களில் 12 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு

0 1972

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் இல்லம் உள்பட பல்வேறு இடங்களில் 12 மணி நேரத்திற்கு மேல் வருமான வரி சோதனை நடைபெற்றது.

நீலாங்கரையில், சபரீசன் நண்பர் எனக் கூறப்படும் ஜி ஸ்கொயர் பாலா இல்லத்திலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்ட நிலையில், அதற்கான ஆவணம் இருந்ததால் பணம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது.

இதனிடையே வருமான வரித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், வருமான வரித்துறை சட்டத்தின் 132 வது பிரிவின்படி, 28 இடங்களில் சோதனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் வரி ஏய்ப்புகளுக்கான முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments