மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்களுடன் மோதல்

0 21942
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி ஊழியர்கள் போக்குவரத்து ஊழியர்களுடன் மோதல்

மதுரை கப்பலூர் சுங்கசாவடியில் ஒருமாத நிலுவை தொகையை காட்டாமல் வந்த அரசு பேருந்துகளை அனுமதிக்காததால் போக்குவரத்து ஊழியர்களுக்கும், சுங்கசாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கடந்த ஒரு மாதகாலமாக கப்பலூர் சுங்கச்சாவடியைப் பயன்படுத்தாமல் வெளியூர் மற்றும் உள்ளூர் செல்லும் பேருந்துகள் மாற்று பாதையில் சென்றுவந்தன. இதனால் பழைய நிலுவைத் தொகை கட்டப்படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பழைய நிலுவை தொகையை அரசு பேருந்துகளுக்கு செலுத்தி விட்டதாக போக்குவரத்து  அதிகாரிகள் கூறியதால், நேற்று இரவு கப்பலூர் சுங்கச்சாவடி வழியாக அரசுப் பேருந்துகள் செல்லமுயன்றன.

ஆனால் பேருந்துகளை சுங்கசாவடி ஊழியர்கள் சிறைப்பிடித்ததோடு, அனுமதிக்கவும் மறுத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments