சீரம் தடுப்பூசிகளைப் பெறுவதில் தாமதம்: இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்

0 1227
இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்

சீரம் நிறுவனத்தில் இருந்து தடுப்பூசிகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் இலங்கையில் கொரேனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணியை இலங்கை தொடங்கியது. முதற்கட்டமாக 5 லட்சம் டோஸ்கள் வாங்குவதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் அடுத்தடுத்து தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது இதற்கான மருந்துகள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதால் தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இலங்கை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சீனாவிடமிருந்து 6 லட்சம் டோஸ் சினோபார்ம் மருந்துகளும், ரஷ்யாவிடமிருந்து 7 லட்சம் ஸ்புட்னிக் V மருந்துகளையும் வாங்குவதற்கு இலங்கை ஆர்டர் கொடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments