உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் இன்று பிரசாரம்

சென்னை சவுகார்ப்பேட்டை மின்ட் தெரு சந்திப்பில் அதிமுக ,பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் அப்பகுதியில் அமித் ஷாவுக்கு மலர்தூவியும் பட்டாசுகள் வெடித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரச்சாரம் முடித்து பத்து மணியாகிவிட்டதால் பாஜகவினரை சந்திக்காமல் புறப்பட்டுச் சென்றார்.
மாலையில் முன்னதாக துறைமுகம் தொகுதியில் அமித் ஷா பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று சென்னையில் ஆயிரம் விளக்கு உள்ளிட்ட தொகுதிகளில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
Comments